News December 12, 2025
திருச்சி: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு “அவ்வையார் விருது” ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற தளத்தில் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-213796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 17, 2025
திருச்சி: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <
News December 17, 2025
திருச்சி மாவட்டத்தில் நாளை பவர் கட்!

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (டிச.18) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது. இதனால் மண்ணச்சநல்லூர், தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், ஈச்சம்பட்டி, கங்கைகாவேரி, அய்யம்பாளையம், மாதவன் சாலை, கவி பாரதி நகர், தேவராய நகர், ஓலையூர், மாம்பழச்சாலை, உத்தமர்சீலி, சென்னை பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News December 17, 2025
திருச்சி: சிறுமி பாலியல் வன்கொடுமை – கோர்ட் அதிரடி

மணப்பாறை அருகே ஒரு கிராமத்தில், கடந்த 2021-ம் ஆண்டு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை, சுரேஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுமி கத்தி கூச்சலிடவே, அவரது தலையில் கல்லால் அடித்துவிட்டு தப்பி ஓடிய சுரேஷை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் குற்றவாளி சுரேஷுக்கு நேற்று 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


