News August 5, 2024
திருச்சி அருகே மினி திரையரங்கம்

திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் 1.63 ஹெக்டேர் நிலப்பரப்பில் ரூ.13.70 கோடி செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொழுது போக்கு பூங்காவுடன் பறவைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 பேர் தங்கும் வகையில் மினி தியேட்டர், பூங்கா, உணவகம், ஓய்வறைகள், வாகனம் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இம்மாதத்தில் அனைத்து பணிகளும் முடிந்து திறக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 14, 2026
திருச்சி: SBI வங்கியில் வேலை அறிவிப்பு

SBI காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 14, 2026
திருச்சி: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 14, 2026
திருச்சி: மாடு குறுக்கே வந்ததால் விபரீதம் – போலீஸ் பலி!

திருச்சி விமான நிலையம் வயர்லஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் இருதய பிரான்சிஸ் (67). ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர், நேற்று காலை தனது டூவீலரில் கொட்டப்பட்டு அகதிகள் முகாம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாடு ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


