News April 24, 2024

திருச்சி அருகே பயங்கர விபத்து; தலை நசுங்கி மரணம் 

image

திருச்சி திருவானைக்காவலை சேர்ந்த பழனியம்மாள் (45), நேற்று மதியம் தனது மகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். டிவிஎஸ் டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி ஸ்கூட்டரில் மோதியது பழனியம்மாள் கீழே விழுந்தார். பின்னால் வந்த கான்கிரீட் கலவை லாரியில் சக்கரம் அவரது தலை மீது ஏறி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார், லாரி டிரைவர் தப்பி ஓடினார்.போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு.

Similar News

News July 7, 2025

திருச்சி: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். மேலும் கடைசி நாள் ஜூலை 24ஆம் தேதி ஆகும். SHARE பண்ணுங்க.

News July 7, 2025

திருச்சி: தபால் நிலையத்தில் மொபைல் சார்ஜிங் வசதி அறிமுகம்

image

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்தில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தலைமை தபால் நிலையத்தில் “மொபைல் சார்ஜிங் நிலையம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இணைப்புகள் கொண்ட இந்த மொபைல் சார்ஜிங் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மண்டல பொது மேலாளர் நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.

News July 7, 2025

திருச்சி: டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு

image

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மணப்பாறை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நாளை மணப்பாறை பகுதியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று திருச்சி வந்தடைந்தார். அவருக்கு திருச்சி விமான நிலையத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அமமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!