News June 9, 2024
திருச்சி அருகே தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு

தொட்டியம் வட்டம் அரங்கூர் முல்லை நகரில் நேற்று பாண்டி என்பவர் வேகமாக டூவீலரில் சென்றுள்ளார். அங்கு இருந்தவர்கள் ஏன் வேகமாக செல்கிறாய் என்று தகாத வார்த்தைகளை பேசியும் குச்சியால் கல்லாலும் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த பாண்டி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கிய நான்கு பேர் மீது தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News September 15, 2025
மாவட்ட மைய நூலகத்தில் சிறுவர்கள் கதை எழுத பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில், சிறுவர் கதை எழுதும் பயிற்சி இன்று நடைபெற்றது. அதற்கு வாசகர் வட்டத் தலைவர் அல்லிராணி தலைமை வகித்தார். மாவட்ட மைய நூலகர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். சிறுவர்களுக்கு, சிறார் எழுத்தாளர் கார்த்திகா, சிறுகதை எழுதுவதற்கான பயிற்சி அளித்தார். இதில் 5 முதல் 13 வயதுடைய சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
News September 14, 2025
யுபிஎஸ்சி தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு-II மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு-II இன்று திருச்சியில் 15 மையங்களில் நடைபெறுகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள வாசவி வித்தியாலயா பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News September 14, 2025
திருச்சி: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

திருச்சி மக்களே மக்களே தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Assistant பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
✅துறை: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
✅பணி: Assistant
✅கல்வி தகுதி: டிகிரி
✅சம்பளம்: ரூ.50,000 –
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 25.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..