News November 18, 2024

திருச்சி அருகே டூவீலரில் இருந்து தவறி விழுந்த திருநங்கை பலி

image

திருச்சி அருகே கோப்பு கிராமத்தைச் சேர்ந்த சோபியா. திருநங்கையான இவரும், போசம்பட்டியை சேர்ந்த வெங்கடேசனும் நண்பர்கள் ஆவர். இந்நிலையில் தோகைமலை சாலையில் உள்ள ஒத்தக்கடை டாஸ்மாக்கில் இருவரும் அதிகமாக மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வேகமாக பயணித்ததில், பின்பக்கம் அமர்ந்திருந்த சோபியா கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 19, 2024

சிறுகனூர் அருகே விவசாயி பலி

image

பாலையூரை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (36). இவர் தத்தமங்கலத்திலிருந்து பாலையூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சாலையின் குறுக்கே மயில் வந்ததால், அதன் மீது வாகனம் மோதாமல் இருக்க பிரேக் பிடித்தார். அப்போது ராஜீவ் காந்தி நிலை தடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 19, 2024

கல்வி உதவித்தொகை பெற ஆட்சியர் அழைப்பு

image

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான என்ஐடி மற்றும் ஐஐடியில், பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான மாணவர்கள் திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News November 18, 2024

திருச்சி மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அறிவிப்பு

image

திருச்சியில் நடப்பு 2024-2025ஆம் ஆண்டு நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கான பயிர் காப்பீட்டுத் தொகை ஒரு டிக்கருக்கு ரூ.566-ஐ உடனடியாக பொது சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு ரபி பருவத்திற்கு ஷீமா காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.