News March 19, 2024
திருச்சி அருகே உத்தரவு

திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்தளத்தில் மருந்தகம் வைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்காக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளின் நிலை குறித்து இன்று திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News November 4, 2025
திருச்சி: நெடுந்தூர ஓட்டப் போட்டி அறிவிப்பு

உடல் தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் “அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி” திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் வரும் நவ.8ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலக எண்ணை (0431-2420685) தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
திருச்சி: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News November 4, 2025
திருச்சி: கிராம ஊராட்சி செயலர் வேலை!

திருச்சி மாவட்டத்தில் 72 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்தது 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


