News November 3, 2025
திருச்சி அருகே இருவருக்கு கத்தி குத்து!

சமயபுரத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன் (26), ராஜேஷ் (22), புகழேந்தி (37) ஆகிய மூவரும் நேற்று முன்தினம் சமயபுரம் நால்ரோட்டில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட அரவிந்தன் மற்றும் ராஜேஷ் ஆகியோரை புகழேந்தி வைத்திருந்த கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Similar News
News November 3, 2025
திருச்சி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (நவ.4) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி லால்குடி ஒன்றியம் ஜெங்கமராஜபுரம் பகுதியிலும், துறையூர் ஒன்றியம் ரங்கநாதபுரம் பகுதியிலும், முசிறி ஒன்றியம் ஏவூர் பகுதியிலும், மணப்பாறை ஒன்றியம் கருப்பூர் பகுதியிலும் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
திருச்சி: கார் மோதி பெண் துடிதுடித்து பலி

நவல்பட்டை சேர்ந்த ராஜா என்பவரது மனைவி கோகிலா(49) நேற்று இரவு, மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் மோதியதில் கோகிலா தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கோகிலா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டிவந்த ராமநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


