News January 9, 2026
திருச்சி: அரசு பஸ் – லாரி மோதி விபத்து

மணப்பாறை அடுத்த நொச்சிமேடு பகுதியில் நேற்று 38 பயணிகளுடன் மன்னார்குடியில் இருந்து கம்பம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரி திடீரென திரும்ப முயன்றதால், அரசு பேருந்து லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி சாலையின் நடுவே கவிழ்ந்த நிலையில், அரசு பேருந்தின் முன்பக்கம் நொறுங்கியது. இருப்பினும், நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி தப்பினர்.
Similar News
News January 10, 2026
திருச்சி: வெளிநாடு செல்ல ஆசையா?

திருச்சி மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற <
News January 10, 2026
திருச்சி: 3 நாட்களுக்கு ரயில் ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி – காரைக்கால் டெமு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் 11, 14, 20 ஆகிய தேதிகளில், திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 10, 2026
திருச்சி: பொருளாதார குற்றப்பிரிவு முக்கிய அறிவிப்பு

திருச்சி துறையூரை சேர்ந்த அப்பாதுரை என்பவர் “ஸ்ரீ மாரியம்மன் சிட்ஃபண்ட்ஸ்” என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அவர் மீது பொருளாதார குற்றப்பிரிவு மூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே மேற்கண்ட சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


