News December 14, 2025
திருச்சி: அரசு பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு…

திருச்சி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ‘1800 599 1500’ என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ஏற்ற மறுப்பது, பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வது, தாமதமாக வருவது, சில்லறை பிரச்சனை, ஓட்டுநர் அல்லது நடத்துநரின் தவறான நடத்தை போன்ற புகார்களை பயணிகள் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News December 20, 2025
திருச்சி: பெண்கள் தொழில் தொடங்க அரிய வாய்ப்பு

திருச்சி மாவட்ட பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இங்கு<
News December 20, 2025
திருச்சி: பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (டிச.20) மற்றும் நாளை (டிச.21) SIR பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாம்களை SIR பட்டியலில் பெயர் விடுபட்ட வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு ‘1950’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 20, 2025
திருச்சி: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் திருச்சி மாவட்டத்தில் இருந்து மட்டும் 3,31,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <


