News January 29, 2026
திருச்சி: அரசுப் பேருந்து மோதி வியாபாரி பலி

திருச்சி மாவட்டம் வளநாட்டைச் சேர்ந்தவர் வளையல் வியாபாரியான ராமு. இவர் நேற்று பொன்னக்கோன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற வளைகாப்புக்கு சென்று வளையல் கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றார். அப்போது கல்லாமேடு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News February 2, 2026
திருச்சி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

திருச்சி மாவட்டம் அதவத்தூர், சிறுகனூர் துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.3) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி, வாசன் நகர், குழுமணி, வயலூர், சோமரசம்பேட்டை, புலியூர், போதாவூர், சிறுகனூர், ஆவாரவள்ளி, திருப்பட்டூர், வாழையூர், குமுளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News February 2, 2026
திருச்சி: சம்பவ இடத்திலேயே கணவன்-மனைவி பலி

திருச்சி, துவாக்குடி பெல் நகர் கலைஞர் தெருவை சேர்ந்த தம்பதி குணசேகரன் (59) – லட்சுமி (55). இவர்கள் இருவரும் நேற்று துவாக்குடி செல்வதற்காக பெல் நகர் பகுதியில் இருந்து திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் திரும்பிய போது வேதாரண்யத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற கார் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து பெல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 1, 2026
திருச்சி: பொதுமக்கள் நடமாட தடை – ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைபாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், வரும் பிப்.2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை, துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதியில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும், பொதுமக்கள் நடமாடவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஈடுபடுத்தவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


