News February 27, 2026

திருச்சி: அமைச்சர் நேரு அறிக்கை வெளியீடு

image

திருச்சி அமைச்சர் நேரு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருச்சியில் மார்ச்.9ம் தேதி ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட, கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். இங்கு திரளும் கூட்டத்தின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று, திராவிட மாடல் 2.o ஆட்சி அமைப்போம்” என தெரிவித்துள்ளார்.

Similar News

News February 28, 2026

திருச்சி: தாயுமானவர் திட்டம் குறித்த அறிவிப்பு

image

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள், வரும் மார்ச்.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வீடு தேடி வந்து வழங்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது இல்லங்களிலேயே ரேசன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 28, 2026

திருச்சி: வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் தங்க நகை கொள்ளை

image

திருச்சி மாவட்டம் கல்லாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு, கடந்த பிப்.25ஆம் தேதி தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 35 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கானக்கிய நல்லூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News February 28, 2026

திருச்சி: காட்டுப்பகுதியில் கிடந்த முதியவர் பிணம்

image

திருச்சி மாவட்டம் வேலங்குறிச்சி காயங்காடு காட்டுப்பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!