News December 28, 2025

திருச்சி: அதிவேகமாக வந்த வாகனம் மோதி ஒருவர் பலி!

image

இனாம்குளத்தூர் அடுத்த மேல அம்மாபேட்டையை சேர்ந்தவர் மாணிக்கம் (55). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மணப்பாறைக்கு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். திருச்சி- திண்டுக்கல் சாலையை கடக்க முயன்றபோது திருச்சி நோக்கி வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இனாம்குளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 28, 2025

திருச்சி: மன உளைச்சலில் தற்கொலை!

image

புலிவலம் அடுத்த ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சிங்கதுறை அடிக்கடி மதுபோதையில் வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் அவரது மனைவி பிரிந்து சென்றதால், மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று அப்பகுதியில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து புலிவலம் போலீசார் சிங்கதுரை உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

News December 28, 2025

திருச்சி: நில ஆவணங்களை சரி பார்க்க எளிய வழி!

image

திருச்சி மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் வீட்டிலிருந்தே உங்களால் பெற முடியும். இந்த தகவலை மறக்கமால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 28, 2025

திருச்சி வழியாக புதிய ரயில் அறிவிப்பு

image

கூட்ட நெரிசலை குறைப்பதற்காக ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக பனாரஸ் சிறப்பு விரைவு ரயில் வரும் 30ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது ராமேஸ்வரத்திலிருந்து 30 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு திருச்சி, ஸ்ரீரங்கம் வழியாக பனாரஸ் சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!