News October 26, 2025
திருச்சி: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

தொட்டியம் அடுத்த சின்னபள்ளிபாளையத்தைச் சேர்ந்த பாண்டியன் (39) என்பவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த புகாரில் முசிறி அனைத்து மகளிர் போலீசார் கடந்த 22-ம் தேதி அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, பாண்டியனுக்கு வாழ்நாள் சிறை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Similar News
News January 25, 2026
திருச்சி: ஒரே ஆண்டில் 849 வழக்குகள்

திருச்சி ரயில்வே காவல் நிலையம் பிச்சாண்டார்கோவில், மணப்பாறை, குமாரமங்கலம், சோழகம்பட்டி ஆகிய ரயில் நிலையங்களை எல்லைகளாக கொண்டு இயங்கி வருகிறது. இக்காவல் நிலையத்தில் கடந்த 2025-ம் ஆண்டு நகை திருட்டு வழக்கு, வழிப்பறி, கைபேசி திருட்டு வழக்குகள் என மொத்தம் 849 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர் கண்காணிப்பின் காரணமாக குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக ரயில்வே காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 25, 2026
திருச்சி: கொலை வழக்கில் 4 பேர் கைது

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல்காரன்பட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர், கடந்த 19-ம் தேதி வீட்டில் உறங்கிய நிலையில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை புத்தாநத்தம் காவல் துறையினர் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். துரிதமாக செயல்பட்ட காவலர்களை திருச்சி மாவட்ட எஸ்.பி பாராட்டினார்.
News January 25, 2026
திருச்சி: கொலை வழக்கில் நான்கு பேர் கைது

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல்காரன்பட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர், கடந்த 19ஆம் தேதி வீட்டில் உறங்கிய நிலையில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை புத்தாநத்தம் காவல் துறையினர், இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். துரிதமாக செயல்பட்ட காவலர்களை திருச்சி மாவட்ட எஸ்பி பாராட்டினார்.


