News March 21, 2024
திருச்சி அதிமுக வேட்பாளர் இவர்தான்!

திருச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
Similar News
News September 18, 2025
திருச்சி: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

திருச்சி மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 – ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..
News September 18, 2025
திருச்சி: கோளரங்கத்தில் கேளிக்கை கூடம் தொடக்கம்

திருச்சி அண்ணா அறிவியல் மையம் – கோளரங்கத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கேளிக்கை காட்சிக்கூடம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பொருத்தப்படும் 30 வித கேளிக்கை உபகரணங்கள் மூலம் அறிவியல் செயல்பாடுகளை மாணவர்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். இதன் பணிகள் விரைவில் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கோளரங்கத்தின் திட்ட இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
திருச்சி: ரயில் பயணி தவறவிட்ட செல்போன் மீட்பு

ரயில்வே பாதுகாப்பு படையினர் “ஆபரேஷன் அமானத்” என்ற முன்னெடுப்பின் கீழ், ரயில் பயணிகள் தவறவிடும் பொருட்களை மீட்டு அவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட செல்போனை ஆர்.பி.எப் காவலர்கள் மீட்டு, உரிய அடையாளங்களை கேட்டறிந்து பயணியிடம் ஒப்படைத்தனர். மேலும் ரயில் பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.