News May 10, 2024

திருச்சி அதிமுக நிர்வாகிகள் அதிரடி நீக்கம்.!

image

தமிழ்நாடு மாஜி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், மாணவரணி செயலாளர் இப்ராம்ஷா, இணை செயலாளர் செல்வகுமார், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் தசரத பாண்டியன், வட்டக் கழகச் செயலாளர் ராஜா ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Similar News

News April 21, 2025

உறையூர் குடிநீர் விவகாரம் – அமைச்சர் விளக்கம்

image

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (ஏப்.21) அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, “திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழப்பு என்பது ஆதாரமற்றது. உயிரிழந்தவர்களின் குடும்ப மருத்துவரே சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். மேலும், சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

News April 21, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் 176 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்றே (ஏப்.21) கடைசி நாள். எனவே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

News April 21, 2025

திருச்சியில் விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

image

திருச்சி மாவட்ட அளவிலான கோடைகால கட்டணமில்லா பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் தடகளம், கால்பந்து, வளைகோல்பந்து, வூசூ, கையுந்துபந்து, மற்றும் குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி முகாமில்
18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். இதில் தினமும் உணவு, சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளனர்.

error: Content is protected !!