News April 30, 2024
திருச்சி: அஞ்சல் வாக்குகள் பிரித்து அனுப்பும் பணி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகளை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு, வாக்குகளை பிரித்து அனுப்பும் பணியில் தீவிரம் அடைந்துள்ளனர்.
Similar News
News March 29, 2026
திருச்சி: பி.எஸ்.என்.எல் சேவை குறித்த அறிவிப்பு

2025-26 நிதியாண்டின் நிறைவை முன்னிட்டு, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் வசதிக்காக திருச்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் வரும் 31-ம் தேதி முழுமையாக செயல்படும். தொலைபேசி கட்டணம் செலுத்துதல், புதிய இணைப்பு, இணைப்பு புதுப்பித்தல் ஆகிய சேவைகள் தடையின்றி வழங்கப்படும். இந்த வாய்ப்பினை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
News March 29, 2026
திருச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி.!

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <
News March 29, 2026
BREAKING: திருச்சியில் விஜய் போட்டி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக சார்பில் தற்போதையை எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் போட்டியிட உள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெரம்பூர் தொகுதியிலும் விஜய் போட்டியிட உள்ளார்.


