News February 26, 2026

திருச்சி: அக்னிபாத் திட்டத்தில் ஆள் சேர்ப்பு!

image

இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பொதுப்பணி, தொழில்நுட்பம், எழுத்தர், காப்பாளர், வர்த்தகர் ஆகிய பிரிவுகளுக்கு, திருச்சி, உள்ளிட்ட 16 மாவட்டங்களில் தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் ஏதேனும் 2 பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவல்களுக்கு திருச்சியில் உள்ள ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 27, 2026

திருச்சி: தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு தேர்தல் நடத்தும் அலுவலரும், 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களையும் நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News February 27, 2026

திருச்சி: ஒரே அழைப்பில் உங்க பிரச்சனைக்கு தீர்வு!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 27, 2026

திருச்சி: தேர்வு மையங்களுக்கு பேருந்து வசதி – ஆட்சியர் உத்தரவு

image

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தேர்வு நடைபெறும் அனைத்து நாட்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், தேர்வு நடைபெறும் அனைத்து நாட்களிலும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர வசதியாக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும், துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!