News April 16, 2024

திருச்சி:வாக்குச்சாவடி பொருட்கள் தயார் செய்யும் பணி தீவிரம்.

image

திருச்சி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக முத்திரைகள் பேப்பர் அழியாத மை உள்ளிட்ட பொருட்களை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர் சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது,

Similar News

News November 6, 2025

பஞ்சப்பூர்: புதிய பாலம் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

image

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் அருகே புதிய மேம்பாலம் மற்றும் அரைவட்ட சுற்றுச்சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூ.800 முதல் ₹.900 கோடி வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்து வருகிறது. இன்னும் 3 மாதங்களில் திட்ட அறிக்கை சமர்ப்பித்த பிறகு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

News November 6, 2025

திருச்சி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

திருச்சி மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 6, 2025

திருச்சி: மீன்வளத்துறை ஒப்பந்தப்புள்ளி – ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம், கண்ணூத்து ஓடை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை குத்தகைக்கு விடுவதற்கான மின்னனு ஒப்பந்தப்புள்ளிகள் வரும் நவ.10ம் தேதி காலை 11 மணி அளவில் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகத்தில் வைத்து இணையவழி மூலம் திறக்கப்படும். விருப்பமுள்ளோர் விண்ணப்பங்களை <>tntenders.gov.in <<>>என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!