News June 14, 2024

திருச்சியை சுற்றி 45 ஆயிரம் கிலோ தூசி நீக்கம்.!

image

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 45,895 கிலோ தூசி மற்றும் வடிகால் வண்டல் நீக்கப்பட்டுள்ளது என்றும், அதனைத்தொடர்ந்து, 31 கிலோமீட்டருக்கு மழை நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றது. இறுதியாக ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ அபிஷேகபுரம் பகுதிகளில் மொத்தம் 15 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

Similar News

News March 2, 2026

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து

image

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது (56809), பொறியியல் பணிகள் காரணமாக வரும் மார்ச்.3, 5, 7, 10, 16, 21, 22 ஆகிய தேதிகளில், கரூர் – ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். எனவே பயணிகள் தங்களது பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 2, 2026

திருச்சி: கலைஞர் கனவு இல்லம் திட்டம் – கூடுதல் வீடுகள் ஒதுக்கீடு

image

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் கடந்த 2024-25ம் நிதியாண்டில், திருச்சி மாவட்டத்திற்கு 4000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தற்போது மாநிலம் முழுவதும் கூடுதலாக 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருச்சிக்கு கூடுதலாக 3000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணியில் அலுவர்கள் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 2, 2026

திருச்சி மாநகராட்சியில் ₹.7.3 கோடி மதிப்பில் மின் சேமிப்பு!

image

திருச்சி மாநகரில், மாநகராட்சிக்கு சொந்தமான 206 கட்டிடங்களில் சோலார் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல பஞ்சப்பூர் பகுதியில் தரை சோலார் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஏப்ரல் 2021 முதல் அக்டோபர் 2025 வரை மொத்தம் 1.5 கோடி மின்சார யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு, மின்வாரிய கட்டணத்தில் ₹.7.3 கோடி வரை சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!