News May 10, 2024
திருச்சியில் 31 பேரை தட்டி தூக்கிய போலீசார்.!

திருச்சிக்கு சென்னையிலிருந்து நேற்று வந்த பஸ்ஸில் 14 கிலோ கஞ்சா கடத்தி வந்த 17 வயது சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இன்று ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர், உறையூர், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக 29 நபர்களை கைது செய்தனர். மொத்தம் திருச்சியில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News July 6, 2025
திருச்சியில் போலீஸ் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

திருச்சி, கிராப்பட்டி சிறப்பு காவல் படை முதலாம் அணியில், அரசு விதிப்படி கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 11-ம் தேதியன்று ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த வாகனங்கள் வரும் 9-ம் தேதி வரை பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் 11-ம் தேதி ரூ.2000 முன் வைப்பு தொகையாக செலுத்தி, ஆதார் உள்ளிட்ட விபரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என சிறப்பு காவல் படை முதலணி கமாண்டர் தெரிவித்துள்ளார்.
News July 6, 2025
திருச்சி: மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் சில உரக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மானிய உரங்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு செய்ததில், 4 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனைவரும் விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News July 5, 2025
திருச்சி: முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு, சமூக நலன் மற்றும் சட்ட உதவி செய்வதற்காக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் முன்னாள் படைவீரர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் சேர விருப்பமுள்ளவர்கள் 0431-2460125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.