News June 27, 2024
திருச்சியில் 30ம் தேதி தமிழ் மொழி பயிற்சி.!

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் சிறார்களுக்கான தமிழ்மொழி பயிற்சி, நூல் விமர்சனம் மற்றும் ஓவிய பயிற்சிகள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியானது, வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 5 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறார்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்கும் சிறார்கள் குறிப்பேடு மற்றும் ஓவியம் வரையத் தேவையான பொருட்கள் எடுத்து வர வேண்டும்.
Similar News
News March 4, 2026
திருச்சி: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் நிதி நிறுவனம், பண மோசடி செய்ததாக 8,441 பேர் புகார் அளித்திருந்தனர். அவர்களில் இதுவரையில் 3942 பேர் மட்டுமே பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி வழக்கு தொடர்புடைய ஆவணங்களை ஆஜர் செய்துள்ளனர். மீதமுள்ள நபர்கள் உரிய ஆவணங்களுடன், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, வாக்குமூலம் வழங்க வேண்டும் என துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள், நடைமேடைகள், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.
News March 3, 2026
திருச்சி: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

திருச்சி மக்களே, <


