News October 20, 2024

திருச்சியில் வெளுத்து வாங்கப்போகும் மழை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் அக்டோபர்-20 (இன்று) முதல் அக்டோபர்-22 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 29, 2025

சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறை அறிவுரை

image

குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் உங்கள் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பொதுவெளி மற்றும் சாலை போன்றவை தெரியும்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சந்தேக நபர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளிக்க கூறியுள்ளது.

News April 29, 2025

திருச்சியில் மே.1ஆம் தேதி கிராம சபை கூட்டம்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே.1ஆம் தேதி தொழிலாளர் தினம் அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி மற்றும் பொதுநிதி செலவினம், இணைய வழி பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். உங்க பகுதி மக்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 29, 2025

திருச்சி – காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

image

திருச்சி கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பராமரிப்புப் பணி காரணமாக திருச்சி-காரைக்கால் டெமு (76820) ஏப்ரல் 29, 30, மே 1 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர்-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி-தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். காரைக்கால்-திருச்சி (76819) காரைக்கால்-தஞ்சாவூர் இடையே ரத்து செய்யப்படும்; தஞ்சாவூர்-திருச்சி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

error: Content is protected !!