News July 10, 2025
திருச்சியில் வாகன ஏலம் அறிவிப்பு: கமிஷனர் அறிக்கை

திருச்சி மாநகர காவல் துறை வாகன சோதனையின் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத 251 டூவீலர்கள், 2 கார்கள் , 1 ஆட்டோ ரிக்ஷா, 4 மிதிவண்டிகள் என மொத்தம் 258 வாகனங்கள் பொது ஏலம் மூலம் வரும் ஜூலை 15-ம் தேதி விற்பனை செய்யப்பட உள்ளது. திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் ஏலத்தில், விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டையுடன் விண்ணப்பிக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 20, 2025
திருச்சி – ராமேஸ்வரம் ரயில் மூன்று நாட்கள் ரத்து

திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் மூன்று தினங்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 25, 26, 28 ஆகிய தினங்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
திருச்சி: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

திருச்சி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <
News August 20, 2025
திருச்சி வரும் குடியரசு தலைவர்

இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வரும் செப்டம்பர் 3 தேதி தனி விமானம் மூலம் திருச்சி வருகை தந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் புறப்பட்டுச் செல்கிறார். அதையடுத்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொள்ளிடம் கரைக்கு வருகை தந்து பின்னர், ஸ்ரீரங்கம் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம் செய்கிறார்.