News March 23, 2024

திருச்சியில் மூவர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

திருச்சியில் கடந்த 17.2.2024ம் தேதி 23 1/2பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் சூசை ராஜ், ஷேக் தாவூத், யாசர் அராபத் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் மூவரின் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் 15 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்ததால், இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேற்று இரவு உத்தரவிட்டார்.

Similar News

News April 9, 2025

திருச்சியில் மதுக்கடைகள் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 10-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். அதனுடன் இணைந்து இயங்கும் மது கூடங்கள் FL2/FL3/FL3A/FL3AA & FL 11 உள்ளிட்ட அனைத்து பார்களும் மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.

News April 8, 2025

திருச்சி ஏர்போர்ட்டில் சீமானிடமிருந்து கத்தி பறிமுதல்

image

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.அப்போது,அவரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அவர் பாக்கெட்டில் சிறிய அளவிலான கத்தி ஒன்று வைத்திருந்தார். விமான நிலையத்தில் எந்த ஆயுதங்களும் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதி உள்ளதால்,அதனை அதிகாரிகள் சீமானிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News April 8, 2025

திருச்சியில் வேலைவாய்ப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!