News August 10, 2024
திருச்சியில் முன்னாள் அமைச்சர் அழைப்பு

திருச்சி அதிமுக புறநகர் மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகின்ற 12ஆம் தேதி தொட்டியம் ஒன்றிய முழுவதும் புதிய உறுப்பினர் கார்டு வழங்குதல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதில் மணமேடு, சீனிவாசநல்லூர், தோளூர்பட்டி, காடுவெட்டி உள்ளிட்ட பகுதிகளின் புதிய உறுப்பினர்களுக்கு கார்டு வழங்க உள்ளதால் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News January 3, 2026
திருச்சி: வியாபாரிகள் சங்க தலைவருக்கு வெட்டு

மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த வணிகர்கள் நல சங்க தலைவரும், பிரபல பாத்திரக்கடை உரிமையாளருமான ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திருப்பைஞ்ஞீலி பேருந்து நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தலையின் பின் பகுதியில் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
News January 2, 2026
திருச்சி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோயில்கள்!

▶️ சமயபுரம் மாரியம்மன் கோயில்
▶️ உறையூர் வெக்காளி அம்மன் கோயில்
▶️ புத்தூர் குழுமாயி அம்மன் கோயில்
▶️ தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயில்
▶️ மலைக்கோட்டை வானப்பட்டறை மாரியம்மன் கோயில்
▶️ உறையூர் செல்லாண்டி அம்மன் கோயில்
▶️ மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில்
▶️ உறையூர் வாராஹி அம்மன் கோயில்
▶️ கண்ணபுரம் மாரியம்மன் கோயில்
▶️ இதை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News January 2, 2026
திருச்சி: இலவச ஓட்டுநர் பயிற்சி

திருச்சி மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <


