News February 2, 2025
திருச்சியில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருச்சி மின்பகிர்மான கோட்ட அலுவலகங்களில், பிப்.4 முதல் அந்தந்தப் பகுதிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. துறையூரில் பிப்.4, முசிறியில் பிப்.7, ஸ்ரீரங்கத்தில் பிப்.14, திருச்சி நகரியத்தில் பிப்.18, திருச்சி கிழக்கில் பிப்.21, மணப்பாறையில் பிப்.25 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு இக்கூட்டங்கள் நடைபெறும் என திருச்சி மின்பகிா்மான கழக மேற்பாா்வை பொறியாளா் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2026
திருச்சி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
திருச்சி: டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News March 1, 2026
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ டி), டெக்னிக்கல் உதவியாளர், இளநிலை பொறியாளர், நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுடைய நபர்கள் www.nitt.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, வரும் மார்ச் 25-ம் தேதிக்குள், “The Register, NIT, Trichy – 620015” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


