News April 9, 2025
திருச்சியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

திருச்சியில் உள்ள தனியார் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான ஓபன் மற்றும் சிறுவர்களுக்கான செஸ் போட்டி வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இப்போட்டியில் 7, 9, 11, 15 வயது பிரிவினர் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர்கள் வயது சான்றிதழ் உடன் வரவேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசு கோப்பையும் வழங்கப்பட உள்ளது. SHARE NOW!
Similar News
News April 17, 2025
பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் அறிவிப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை 21 நாட்களுக்கு திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் தடகளம், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி முகாம் நடத்தப்படட உள்ளது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
News April 17, 2025
திருச்சி: வராக ஜெயந்திக்கு இதை மறக்காதீங்க

இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்த நாளில் வராகரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் ஒரு சேர கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினருக்கும் ஷேர் செய்யுங்கள்..
News April 17, 2025
மாயமான சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த சிறுவன் நேற்று கரியமாணிகத்தில் சைக்கிளில் சுற்றிதிருந்தார். இதையறிந்த சமயபுரம் காவல் ஆய்வாளர் வீரமணி நடத்திய விசாரணையில் சிறுவன் திருச்சி கருமண்டபத்தை சேர்ந்தவரும் தாய் திட்டியதால் கோபித்து கொண்டு வீட்டில் டீயூசன் செல்வதாக கூறிவிட்டு கருமண்டபத்திலிருந்து சைக்கிளில் சமயபுரம் பகுதிக்கு வந்ததாக தெரிந்தது. பின்னர் போலிசார் சிறுவனின் பெற்றோரிடம் இன்று ஒப்படைத்தனர்.