News May 27, 2024
திருச்சியில் மனிதநேயம் குறித்த சொற்பொழிவு

திருச்சி வாசவி கிளப் எலைட் கப்புள்ஸ் சார்பில் மனித நேயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று திருச்சி ரெங்கா அரங்கில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் கலந்துகொண்டு மனிதநேயம் குறித்து பேசினார்.மேலும் வாசவி கிளப் தலைவர் ரமேஷ் பாபு மற்றும் துளசி அறக்கட்டளை நிறுவனர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 3, 2026
திருச்சி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 3, 2026
திருச்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்!

தொட்டியம் அருகே உள்ள அயினாபட்டியில், குடும்பப் பிரச்சனை காரணமாக லாவண்யா (26) என்ற பெண்ணை அவரது கணவர் பொன்னர் (29) அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் தடுக்க வந்த லாவண்யாவின் உறவினர்கள் சரண்யா மற்றும் கன்னியம்மாள் ஆகியோரையும் அவர் தாக்கியுள்ளார். காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தொட்டியம் போலீசார், பொன்னாரை கைது செய்தனர்.
News March 3, 2026
திருச்சி: தாட்கோ சார்பில் பயிற்சிகள் அறிவிப்பு

தாட்கோ சார்பில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியினை முழுமையாக முடித்த பிறகு தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


