News June 28, 2024

திருச்சியில் போலீசாரிடம் சிக்கிய 2 பேர்.!

image

திருச்சி காந்தி மார்க்கெட் பால் பண்ணை பகுதியில் இன்று லாட்டரி சீட்டுகள் விற்றதாக கதிரவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அதேபகுதியில், கார்த்திகேயன் என்கிற பேக் வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததாக அர்ஜுன் என்ற வாலிபரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பணம், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News March 2, 2026

திருச்சி: இன்று மின்தடை அறிவிப்பு!

image

திருச்சி மாவட்டம் பாலகிருஷ்ணம்பட்டி மற்றும் தங்நகர் துணைமின் நிலையங்களில் இன்று(மார்.2) அரைகால மின் பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளது இதனால் இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பெரிய கல்லாங்குத்து ஆர் கோம்பை, கோலை கோனேரிப்பட்டி கிழப்பட்டி வடக்குப்பட்டி, பி.மேட்டூர் வலைப்பட்டி மற்றும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வார மின் வினியோகம் இருக்காது.

News March 1, 2026

திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 1, 2026

திருச்சி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!