News April 3, 2025

திருச்சியில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

image

அரங்கூர், ஏலூர்பட்டி, சீனிவாசநல்லூர், கொளக்குடி, அப்பணநல்லூர், மணமேடு, மகேந்திரமங்கலம் போன்ற பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கி இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News

News August 5, 2025

திருச்சி: ஒரே ஆண்டில் 245 பேர் மரணம்!

image

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 1,806 சாலை விபத்துகளில் 555 பேர் பலியாகினர். அதுபோல 2024-ம் ஆண்டில் நடைபெற்ற 1,922 சாலை விபத்துகளில் 633 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 2025-ம் ஆண்டு மே மாதம் வரை நடந்த 763 விபத்துகளில் 245 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. SHARE !

News August 5, 2025

கரூர் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும்

image

திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பேருந்துகளை திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தற்காலிகமாக இயக்கலாம் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் துவக்கிய நாள் முதல் அனைத்து பேருந்துகளும் பஞ்சப்பூர் சென்ற நிலையில் கரூர் செல்லும் தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கின. இதுதொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

News August 5, 2025

தூய்மை நகரங்களில் தொடர்ந்து பின்தங்கும் திருச்சி

image

மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சில நாட்களுக்கு முன் 2024-25ஆம் ஆண்டுக்கான தூய்மை நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட பெரிய நகரங்கள் பிரிவில் பங்கேற்ற 95 நகரங்களில் திருச்சி 49-வது இடத்தை பிடித்துள்ளது. திருச்சி நகரம் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 8,239. ஆனால் தமிழகத்தில் தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சி முதலிடத்தில்தான் உள்ளது.

error: Content is protected !!