News January 20, 2025
திருச்சியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: ரவுடி கைது

திருச்சி பொன்மலைப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தங்கமணி என்கிற டேஞ்சா் மணி. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர் சில நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் மதுபோதையில் இருந்த தங்கமணி, அவர்களது வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் நேற்று தங்கமணியை கைது செய்தனர்.
Similar News
News August 14, 2025
கிராமசபை கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று அறிவித்துள்ளார். இதில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் காலை 11 மணிக்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News August 14, 2025
திருச்சி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆக.15-ம் தேதி, திருச்சி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வகை மதுபான கடைகள் மற்றும் கூடங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதையோ, வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையோ தவிர்க்க வேண்டும் என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News August 13, 2025
திருச்சி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இல்லையா? Check It

திருச்சி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <