News September 10, 2025

திருச்சியில் நடக்கும் இலவச வகுப்பு, கலெக்டர் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படவுள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வரும் 15ம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

Similar News

News September 10, 2025

திருச்சி – காரைக்கால் ரயில் இரு தினங்கள் ரத்து

image

பல்வேறு பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலானது வரும் 11, 12 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து காலை 8:35 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW

News September 10, 2025

திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

image

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து மோப்பநாய் உதவியுடன் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நாச வேலை தடுப்பு சோதனையில் இன்று ஈடுபட்டனர். ஆர்.பி.எப் ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் பயணிகளின் உடைமைகள், கார் பார்க்கிங், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

News September 10, 2025

திருச்சியில் விஜய்? எப்போது தெரியுமா?

image

திருச்சி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மக்கள் சந்திப்பு இயக்கம் என்ற பெயரில் தொடங்க உள்ளார். அதன்படி வரும் செப்டம்பர் 13.09.2025 தேதி திருச்சிமாவட்டத்திற்கு வருகை தந்து பொதுமக்களை சந்திக்க உள்ளார் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிகாரபூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. SHARE IT NOW

error: Content is protected !!