News August 11, 2024
திருச்சியில் தேசிய அளவிலான கராத்தே போட்டி

திருவானைக்காவலில் 20வது தேசிய அளவிலான ஓப்பன் கராத்தே போட்டி இன்று நடந்தது. இதில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் பாரம்பரியம் மற்றும் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் இளஞ்செழியன் வரவேற்று பேசினார். மேலும் திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கலை குத்து விளக்கேற்றி பரிசுகளை வழங்கினார்.
Similar News
News April 24, 2025
அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News April 24, 2025
இரு தரப்பினர் இடையே மோதல் -ஒருவர் கொலை

திருச்சி தேவதானம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை இருதரப்பினர் இடையே முன்விரோதம் காரணமாக, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்த தாக்குதலில் தாராநல்லூரைச் சேர்ந்த கருக்குவேல் என்பவர் உயிரிழந்துள்ளார் . இதுகுறித்து திருச்சி கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 23, 2025
திருச்சி: ஐ.ஐ.எம்-இல் நூலக பயிற்றுநர் பணி

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்) நூலக பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்ற 28 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.23,000 வழங்கப்படும். www.iimtrichy.ac.in என்ற இணையதளத்தில் வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஐ.ஐ.எம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.