News June 4, 2024
திருச்சியில் துரை வைகோ வெற்றி

திருச்சி மக்களவை தொகுதி தேர்தலில், மதிமுக வேட்பாளர் துரைவைகோ, 3,11,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.மொத்தம்,25 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் மொத்தம்,5,38,408 வாக்குகளை துரை வைகோ பெற்று இருக்கிறார்.அதிமுக வேட்பாளர் கருப்பையா 227326 வாக்குகள் பெற்று 2ம் இடம் பெற்றுள்ளார்.நாதக வேட்பாளர் ராஜேஷ் 106676 வாக்குகள் பெற்று 3ம் இடம் பெற்றுள்ளார். அமமுக வேட்பாளர் 99453 நோட்டா வாக்குகள் பெற்றுள்ளார்.
Similar News
News September 13, 2025
திருச்சியில் இன்று களமிறங்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து இன்று (செப்.13) தொடங்க உள்ளார். திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே காலை 10.30 மணியளவில் மக்களை சந்திக்கும் அவர், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்தை கமெண்ட் செய்யவும். SHARE NOW!
News September 13, 2025
திருச்சி: ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சியில் அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான குறைதீர் கூட்டம் வரும் அக்.10 ஆம் தேதி, ஆட்சியர் அலுவலகதில் நடைபெற உள்ளது. இதில் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் உள்ள குறைபாடுகளை குறிப்பிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்பிய நபர்கள் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
திருச்சி: திட்ட முகாமில் 1556 மனுக்கள் பதிவு

திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (செப்.12) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பெருவளநல்லூர் பகுதியில் நடைபெற்ற முகாமில் அதிகபட்சமாக 480 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும் மணிகண்டம் ஒன்றியத்தில் 180, துறையூர் ஒன்றியத்தில் 213, திருவெறும்பூர் ஒன்றியத்தில் 257 மனுக்கள் என மொத்தம் 1556 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.