News September 1, 2025
திருச்சியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் மது பிரியர்கள் அவதிக்கு உள்ளாகினர். அதே நேரம் திருச்சியில் வழக்கம் போல் டாஸ்மாக் கடைகள் இயங்கின. திருச்சியில் அண்டை மாவட்டமான தஞ்சையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
Similar News
News September 1, 2025
திருச்சி மக்களே.. புகார் அளிக்க இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க!

திருச்சி மக்களே நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சேவையில் குறைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பணம் கொடுத்து வாங்கிய பொருளில் காலாவதி, கெட்டுப்போன, போலியானவை போன்ற குறைகள் இருந்தால், வாங்கிய பொருளின் Bill-யை வைத்து சட்டப்படி திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிப்பதன் மூலம் உரிய இழப்பீடு பெற முடியும். இதனை அனவருக்கும் SHARE பண்ணுங்க. நீங்களும் விழிப்புணர்வுடன் இருங்கள்!
News September 1, 2025
திருச்சி மக்களே.. தெரு நாய் தொல்லை அதிகம் உள்ளதா?

தமிழகத்தில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றனர். சில நேரங்களின் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. இனி தெருக்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களைக் கண்டு அச்சமடையவோ, கவலையோ வேண்டாம். உங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க
News September 1, 2025
திருச்சி: ஒரு மெசேஜ் போதும், உடனடி தீர்வு !

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், திருச்சி மாவட்ட மக்கள் ‘94861-11912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!