News March 30, 2024
திருச்சியில் தானியங்கி ஆய்வகம் தொடக்கம்,

திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் இந்தியாவின் முதல் தானியங்கி தொழில்நுட்ப தொழில்துறை ஆய்வகம் நேற்று தொடங்கப்பட்டது. இந்திரா கணேசன் கல்வி குழும தலைவர் கணேசன் தலைமையிலும் செயலாளர் ராஜசேகரன் மற்றும் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர், சென்னை பல்கலை கழக துணை வேந்தர் ராஜ் திறந்து வைத்தார். தானியங்கி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்கள் திறன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
Similar News
News January 29, 2026
திருச்சி: அரசுப் பேருந்து மோதி வியாபாரி பலி

திருச்சி மாவட்டம் வளநாட்டைச் சேர்ந்தவர் வளையல் வியாபாரியான ராமு. இவர் நேற்று பொன்னக்கோன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற வளைகாப்புக்கு சென்று வளையல் கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றார். அப்போது கல்லாமேடு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 29, 2026
திருச்சி: டாஸ்மாக் விடுமுறை அறிவிப்பு

வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும் வரும் பிப். 1ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். மேலும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FL1/FL2/FL3/FL3A/FLFL3AA & FL11 ஆகிய ஹோட்டல் பற்களும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.