News August 23, 2024
திருச்சியில் தனியார் பேருந்து எரிந்து நாசம்

திருச்சியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு தனியார் பேருந்து 27 பயணிகளோடு புறப்பட்டுள்ளது. திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தைக் கடந்தபோது பேருந்தின் டயர் வெடித்து திடீரென தீப்பற்றியது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தினார். இதனையடுத்து பயணிகளை அலர்ட் செய்த ஓட்டுனர் அவசரமாக இறங்குமாறு தெரிவித்ததால் 27 பேர் உயிர் தப்பினர். ஆனால் பேருந்து முழுமையாக எரிந்து நாசமானது.
Similar News
News August 14, 2025
திருச்சி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் முதியவர் பலி

திருச்சி உத்தமர்சீலியை சேர்ந்த கணபதி (74) என்பவர் தனது விவசாய தோட்டத்திற்கு கடந்த 11-ம் தேதி நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென முட்புதருக்குள் இருந்து ஓடி வந்த காட்டுப்பன்றி அவரை கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 14, 2025
திருச்சி: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 14, 2025
திருச்சி: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை (பாகம்-2)

▶️ வயது வரம்பு – 21-33 (ஓபிசி – 33, எஸ்.சி – 35, மாற்றுத்திறனாளிகள் – 40)
▶️ இடஒதுக்கீடு: SC – 12, ST – 1, OBC – 17, EWS – 1, பொதுப்பிரிவு – 6
▶️ சம்பளம் : ரூ.22,405 முதல் ரூ.62,265
▶️ விண்ணப்ப கட்டணம்: ரூ.850 ( எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ரூ.100)
▶️ தமிழ்நாட்டிலேயே பணி நியமனம் வழங்கப்படும்
▶️ அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!