News September 4, 2025

திருச்சியில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

image

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, திருச்சியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. திருச்சியில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Similar News

News September 6, 2025

முதலிடம் நோக்கி தமிழ்நாடு – எம்.எல்.ஏ இனிகோ

image

திருச்சி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணத்தின் வழியாக, ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதனால் தமிழக இளைஞர்களுக்கு 17,613 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். முதலிடம் நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

News September 6, 2025

திருச்சி: கோழிப்பண்ணை அமைக்க 50% மானியம்

image

திருச்சி, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 6, 2025

திருச்சி: ITI, டிப்ளமோ போதும்.. சூப்பர் வாய்ப்பு

image

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு, ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க செப்.,21 கடைசி நாளாகும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!