News January 10, 2026
திருச்சியில் சோகம்: தீக்குளித்து சிறுமி பலி

திருச்சி ஜெயில்பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் பீரோவில் இருந்து பணத்தை எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் கண்டிக்கவே, மனமுடைந்த சிறுமி தன் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
திருச்சியில் தடை: கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் 26, 28 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு கருதி 26, 28 ஆகிய இரண்டு நாட்கள், மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 25, 2026
திருச்சி: குழந்தை வரம் அருளும் அம்மன்!

திருச்சி மாவட்டம், துறையூரில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் வழிபாடு நடத்தினால் வாழ்வில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகும் என்றும், சுகப்பிரசவத்துடன் கூடிய குழந்தை வரம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க !
News January 25, 2026
த.வெ.க வில் இணைந்த முன்னாள் அமைச்சர்

திருச்சி வயலூர் சாலையை பூர்வீகமாக கொண்டவரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழிகாட்டுதல்படி வலம் வந்தவரும், அதிமுக அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பணியாற்றிய கு.ப. கிருஷ்ணன் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் இருந்துவந்த இவர் இன்று தமிழக தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.


