News September 8, 2025

திருச்சியில் சுற்றுப் பயணத்தை தொடங்கும் விஜய்

image

தவெக தலை​வர் விஜய் வரும் செப்.,13-ம் தேதி திருச்​சி​யில் தேர்​தல் பிரச்சாரத்தை தொடங்க உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. மேலும் அவர் அதே நாளில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் குன்னம் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் இடங்கள் ஓரிரு நாளில் இறுதி செய்யப்​பட்​டு, அதி​காரப்​பூர்​வ​மாக ​வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Similar News

News September 8, 2025

திருச்சி: தபால் சேவை முக்கிய அப்டேட்

image

இந்திய அஞ்சல் துறை சார்பில் மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர் முகாம், திருச்சி தலைமை தபால் நிலையத்தில் வரும் செப்.,24-ம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் நேரிலோ அல்லது வலை செயலிகள் மூலமாகவோ பங்கேற்கலாம். தபால் மூலம் குறைகளை தெரிவிப்போர் தலைமை தபால் நிலைய அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்திற்கு தபால்களை அனுப்ப வேண்டும் என திருச்சி மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலாதேவி தெரிவித்துள்ளார்.

News September 8, 2025

திருச்சி: சிறப்பு ரயில் சேவையை நிரந்தரமாக்க கோரிக்கை

image

திருச்சி – தாம்பரம் இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் 8 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் உள்ளன. இதனால், சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இடம் கிடைக்காத பயணிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது. ஆகவே இந்த சிறப்பு ரயில் சேவையை நிரந்தரமாக்க வேண்டுமென ரயில் பயணிகள் சங்கத்தினர் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 8, 2025

திருச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருச்சி மக்களே இதற்கு விண்ணபிக்க <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>>, Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!