News May 5, 2024
திருச்சியில் சுட்டரிக்கும் வெயில்

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. கத்திரி வெயில் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும் நிலையில், வரும் நாட்களிலும் வெயில் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சியில் 42.1 செல்சியஸ் பதிவாகியுள்ளது.
Similar News
News August 27, 2025
திருச்சி: வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாஸ்கோடகாமா – வேளாங்கண்ணி சிறப்பு ரயிலானது ஆக.27 மற்றும் செப்.1, 6 ஆகிய தேதிகளில் திருச்சி வழியாக இயக்கப்பட உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
இருங்களூர்: உயர்வுக்கு படி முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் 2024-25 கல்வியாண்டில் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரும் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “உயர்வுக்கு படி முகாம்” இருங்களூர் எஸ்.ஆர்.எம் கல்வி வளாக கூட்ட அரங்கில் ஆக.28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 26, 2025
திருச்சி: தொழில்நுட்ப பணிகள் தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு திருச்சி மாவட்டத்தில் வரும் 31-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 15 தேர்வு மையங்களில் 4415 பேர் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வு பணிகளுக்கென 15 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு மையங்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.