News October 18, 2024
திருச்சியில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

திருச்சியில் சிறுமி ஒருவரை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சோமரசன்பேட்டையை சேர்ந்த சின்ராசு மற்றும் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதால் சக்திவேல் என்பவர் சிறையில் இருக்கிறார். அவர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் காமினி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 17, 2025
திருச்சியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, வருகிற 31ம் தேதி ஜமால் முகமது கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற, 18 – 35 வயதுக்குட்பட்டவர்கள் கல்வி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை, புகைப்படத்துடன் பங்கேற்கலாம்.
News August 17, 2025
திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.18) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் முசிறி, தண்டலைப்புதூர், தும்பலம், மணமேடு, எடமலைப்பட்டி புதூர், மன்னார்புரம், கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜாமலை, மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மெண்ட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE !
News August 17, 2025
திருச்சி: மருங்காபுரியில் லாட்டரி விற்றவர் கைது

திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு போலிசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது மருங்காபுரி நடுத்தெருவில் அதே பகுதியை சேர்ந்த மதிவாணன் (46) என்பவர் லாட்டரி விற்ற போது கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்து ரொக்கம் ரூ.14000 மற்றும் லாட்டரி எண்கள் குறிக்கப்பட்ட ஒரு பேப்பர் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.