News March 19, 2025
திருச்சியில் கிராம சபை கூட்டம் தேதி மாற்றம்

திருச்சி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினமான 23.03.2025 அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் பணிகள் போன்ற பல்வேறு பணிகளை இறுதி செய்து கிராம சபையில் தீர்மானமாக வைப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் 29.03.2025 அன்று மாற்றப்பட்டுள்ளது. இதில் மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
திருச்சியில் மருத்துவருடன் ஒரு நாள் நிகழ்ச்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் வரும் 21-ம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை, ‘மருத்துவருடன் ஒரு நாள்’ நிகழ்ச்சியில், ‘குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி’ என்ற தலைப்பில், ஓய்வுபெற்ற மாவட்ட அரசு சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் சிறப்புரையாற்றி, கலந்துரையாடுகிறார். இதில், பொதுமக்கள், வாசகர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ள மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
News September 19, 2025
திருச்சி: IIM-இல் வேலை வாய்ப்பு

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ப்ரோக்ராம் அசிஸ்டன்ட் (1), செகரட்டரியல் அசிஸ்டன்ட்(1), எக்ஸிக்யூட்டிவ் அசிஸ்டன்ட் (1), மெயின்டனன்ஸ் டெக்னீசியன் (1), இன்ஜினியரிங் டிரெய்னீ (1) உட்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <
News September 19, 2025
திருச்சி மைய நூலகத்தில் யோகா பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில், வரும் 20-ம் தேதி மாலை 5 மணிக்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமான யோகா பயிற்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், மனவளக்கலை மன்ற யோகா ஆசிரியர் முருகேஸ்வரி பயிற்சி அளிக்க உள்ளார். நுாலகத்தில், ஏற்கனவே வியாழக்கிழமை தோறும் நடந்து வந்த இப்பயிற்சி இனி சனிக்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு நடைபெறும் என மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.