News April 2, 2025
திருச்சியில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப்ரல் 4,5 ஆகிய தேதிகளில் திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து, மழைக்கான முன்னேச்சரிக்கையோடு இருங்கள்.
Similar News
News September 18, 2025
திருச்சியில் பதிவான மழை அளவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் ஒன்றரை மணி நேரம் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை கொட்டிதீர்த்தது. அதேநேரம், திருச்சியில் அதிகபட்சமாக மணப்பாறை பொன்னனியார் அணைக்கட்டு பகுதியில் 44.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியது, ஏர்போர்ட் பகுதியில் 21 .2 மிமீ மழை பதிவானது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 316.2 மிமீ மழையும், சராசரியாக 13. 18 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது
News September 18, 2025
திருச்சி: 10th, ITI போதும் அரசு துறையில் வேலை!

திருச்சி மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <
News September 18, 2025
திருச்சி: கால்நடை வளர்ப்பு பயிற்சிக்கு அழைப்பு

திருச்சி கொட்டப்பட்டில் செயல்பட்டுவரும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சிமையத்தில், ஆடுவளர்ப்பு பயிற்சி 22.09.2025 அன்றும், நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி 25.09.2025 அன்றும், கறவைமாடு வளர்ப்பு பயிற்சி 26.09.2025 அன்றும் நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மக்கள் ரூ.590/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது