News June 7, 2024
திருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி மீது பாய்ந்த குண்டாஸ்

திருச்சியில் கடந்த 26.5.2024ம் தேதி பிராட்டியூரில் கஞ்சாவை இளைஞர்களுக்கு விற்பனை செய்த வழக்கில் ரவுடி முத்துராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் ரவுடி முத்துராமன் மீது கஞ்சா விற்பனை செய்ததாக 3 வழக்கும்,1 கொலை வழக்கும், 2 திருட்டு வழக்கு உட்பட 23 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் இன்று உத்தரவிட்டார்.
Similar News
News April 29, 2025
திருச்சியில் மே.1ஆம் தேதி கிராம சபை கூட்டம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே.1ஆம் தேதி தொழிலாளர் தினம் அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி மற்றும் பொதுநிதி செலவினம், இணைய வழி பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். உங்க பகுதி மக்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News April 29, 2025
திருச்சி – காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

திருச்சி கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பராமரிப்புப் பணி காரணமாக திருச்சி-காரைக்கால் டெமு (76820) ஏப்ரல் 29, 30, மே 1 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர்-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி-தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். காரைக்கால்-திருச்சி (76819) காரைக்கால்-தஞ்சாவூர் இடையே ரத்து செய்யப்படும்; தஞ்சாவூர்-திருச்சி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 29, 2025
திருச்சியில் வரி செலுத்தினால் ரூ.5000 ஊக்கத்தொகை

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000/- வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். வரி, வரியில்லா இனங்கள் சம்பந்தமான அனைத்து வரிகளை https://tnurbanepay.tn.gov.in என ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளார்.