News March 26, 2024

திருச்சியில் எம்.எல்.ஏ அறிக்கை!

image

திருச்சி எம்எல்ஏ இனிகோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், பாஜகவுக்கு தமிழக மக்கள் வாக்களித்தால் அது பெரும் அவமானம் எனச் முதல்வர் ஸ்டாலின் விளாசி உள்ளதாக கூறினார் . ஒருவேளை மீண்டும் மோடியே ஆட்சிக்கு வந்து விட்டால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும் என முதல்வர் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.

Similar News

News April 15, 2025

தமிழ்நாடு இளைஞர்களுக்கு சிங்கப்பூர் அரசு விருது

image

கடந்த வாரம் சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல குழந்தைகள் தீயில் சிக்கி கொண்டனர். அப்போது அருகில் பணியில் இருந்த லால்குடி,  கல்லகம் ஊராட்சியை சேர்ந்த சரண்ராஜ் உள்பட 4 தமிழக இளைஞர்கள் தீயணைப்பு வாகனம் வரும் முன் துரிதமாக செயல்பட்டு 16 குழந்தைகள் உட்பட 22 பேரை காப்பாற்றியுள்ளனர். இவர்களின் வீர தீர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசாங்கம் ‘Friends of ACE’ எனும் விருதினை வழங்கி பாராட்டியது.

News April 15, 2025

திருச்சி: அக்னிவீர் பிரிவுக்கு ஆள் சேர்ப்பு தேதி நீட்டிப்பு

image

திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்னி வீரர்களின் பல்வேறு பிரிவுகளுக்கான ஆள்சேர்ப்புக்கான பதிவு ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2025

திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (ஏப்.15) திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதனை ஈடுசெய்யும் வகையில் வரும் மே.3 ஆம் தேதி வேலைநாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க..

error: Content is protected !!