News May 3, 2024
திருச்சியில் உச்சம் தொட்ட வெயில்

தமிழக முழுவதும் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.இன்று அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் தொடங்கியதன் தாக்கம் திருச்சியில் இந்த ஆண்டு 7 முதல் 10 டிகிரி வரை வெப்பம் அதிகரித்துள்ளது.நேற்றைய வெப்பநிலை 109.58 வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
Similar News
News August 26, 2025
திருச்சி: அரசு பேருந்து குறித்து புகார் அளிக்க வேண்டுமா?

திருச்சி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!
News August 26, 2025
திருச்சி: போர்க்லிப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் போர்க்லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 26, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில் தற்போது பருவமழையை முன்னிட்டு வளர்ப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்திய பெருங்கெண்டை, கட்லா, ரோகு மற்றும் மிர்கால் மீன்குஞ்சுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. எனவே மீன்குஞ்கள் தேவைப்படும் விவசாயிகள் அரசு நிர்ணயித்த விலையில் மீன்குஞ்சுகளை கொள்முதல் செய்து மீன்வளர்த்து பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE NOW!