News October 24, 2024
திருச்சியில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
திருச்சி கொட்டப்பட்டு கோழிப்பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 28ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக மையத்தின் தலைவர் சிபி தாமஸ் நேற்று தெரிவித்துள்ளார். எனவே இதில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி பயிற்சியில் சேரலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 19, 2024
திருச்சி: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாதாந்திர உதவித்தொகை ரூ.2000 பெற விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் பயனடைய விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்று திறனாளி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் <
News November 19, 2024
அரியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 சிறுவர்கள்
திருச்சி அரியமங்கலம் போலீசார் நேற்று ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 17 வயது சிறுவர்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர், அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சிறுவர்களை கைது செய்தனர். பின்னர், 2 சிறுவர்களையும் இன்று ஜாமீனில் விடுவித்தனர்.
News November 19, 2024
திருச்சியில் இருந்து ஆரம்பித்தால் வெற்றி தான்: அமைச்சர் பேச்சு
திருச்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கே.என். நேரு இன்று பேசியது, தமிழக முதல்வர் மீதும், இந்த ஆட்சி மீதும் குறை சொல்லி அடுத்து நாங்க தான் என எதிர் கட்சி தலைவர்கள், அதிமுகவினர் நிறைய பேர் பேசுகின்றனர். ஆனால், தமிழக முதல்வராக ஸ்டாலின் தான் வருவார். இன்று யார்! யாரோ? நம்மை வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. திருச்சியில் இருந்து ஆரம்பித்தால் எதுவுமே வெற்றி தான் என்றார்.