News August 31, 2025
திருச்சியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்!

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஆக.31) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளன. குறைந்தது 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 9499055901. SHARE !
Similar News
News September 1, 2025
திருச்சி மக்களே.. தெரு நாய் தொல்லை அதிகம் உள்ளதா?

தமிழகத்தில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றனர். சில நேரங்களின் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. இனி தெருக்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களைக் கண்டு அச்சமடையவோ, கவலையோ வேண்டாம். உங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க
News September 1, 2025
திருச்சியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் மது பிரியர்கள் அவதிக்கு உள்ளாகினர். அதே நேரம் திருச்சியில் வழக்கம் போல் டாஸ்மாக் கடைகள் இயங்கின. திருச்சியில் அண்டை மாவட்டமான தஞ்சையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
News September 1, 2025
திருச்சி: ஒரு மெசேஜ் போதும், உடனடி தீர்வு !

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், திருச்சி மாவட்ட மக்கள் ‘94861-11912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!