News March 22, 2024
திருச்சியில் இன்று முதல்வர் பிரச்சாரம்

திருச்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதலமைச்சர், திருச்சியில் துரை வைகோ மற்றும் பெரம்பலூர் வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 5, 2025
திருச்சி: மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு 187 இடங்கள் காலியாக உள்ளன. காலி இடங்கள் தொடர்பான விவரங்களை www.kapvgmctry.ac.in என்ற தளத்தில் காணலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, வரும் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிக்குள் முதல்வர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News September 5, 2025
திருச்சி மக்களே இலவச பயிற்சி, Miss பண்ணாதீங்க!

திருச்சி கிராமபுர இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் IOB வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் சார்பில், 30 நாள் இலவச ⏩செல்ஃபோன் பழுது நீக்கம், ⏩சிசிடிவி கேமரா பொருத்துதல், ⏩வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்கம் போன்ற பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படவுள்ளது. Bank PassBook, Photo, Aadhaar, Ration Card போன்ற ஆவணங்கள் அவசியம். விவரங்களுக்கு 8903363396 எண்ணை அழைக்கலாம். (SHARE பண்ணுங்க!)
News September 5, 2025
திருச்சி: சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா துறையால், சுற்றுலா தொழில் முனைவோருக்கு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான சுற்றுலா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tntourismawards.com என்ற தளத்தில் படிவங்களை பூர்த்தி செய்து வரும் 15-ம் தேதிக்குள், தேவையான சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.